இனி வக்பு வாரியத்திற்கு அதிகாரமே இல்லையா? விரைவில் புதிய மசோதா.. மத்திய அரசு தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 5:26 pm

வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமியர்களின் சமூகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்காக இயங்கி வரும் வக்பு வாரியத்தின் குறிப்பாகச் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.

சமீபத்தில் தலைநகர் டெல்லியில் உள்ள 123 சொத்துகளுக்கு வக்பு வாரியம் உரிமை கோரியிருந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே மத்திய அரசு தற்போது இந்த அதிகார குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல் உள்ளதாக தெரிகிறது.சமீபத்தில் தலைநகர் டெல்லியில் உள்ள 123 சொத்துகளுக்கு வக்பு வாரியம் உரிமை கோரியிருந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே மத்திய அரசு தற்போது இந்த அதிகார குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல் உள்ளதாக தெரிகிறது.

இதுதவிர்த்து வக்பு வாரியத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் உட்பட வக்பு வாரிய அதிகார வரையறையில் 40 திருத்தங்களைக் கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்க உள்ள நிலையில் இந்த புதிய மசோதா எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் இந்த மசோதா மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 336

    0

    0