அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; காதில் வழிந்த இரத்தம்; fight fight fight முழக்கம்,…
Author: Sudha14 July 2024, 8:26 am
அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர், துணை அதிபர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர் இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோபைடன் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவின் பல்வேறு
பல்வேறு மாகாணங்களில் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ட்ரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தற்போது டொனால்ட் டிரம்ப் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக டிரம்ப் தரப்பு செய்தி தொடர்பாளர் குறிப்பிடும் போது இந்த கொடூர சம்பவத்தை அடுத்து விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் பாதுகாப்பு பணி மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது நன்றி.இந்த சூழலில் மேலும் ஒரு நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட ட்ரம்ப்பை பாதுகாப்பு அதிகாரிகள் வேகமாக அழைத்துச் சென்றனர்.அப்போது டிரம்ப் கைகளை உயர்த்தி ஃபைட் ஃபைட் ஃபைட் என முழங்கினர் இதை கண்ட பொதுமக்கள் USA USA USA முழங்கினார்கள். கைகளை உயர்த்தியவாரு டிரம்ப் முழங்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை பற்றி ஜோ பைடன் குறிப்பிடும் போது பென்சில்வேனியாவில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் எனக்கு விரிவாக தகவல் அனுப்பி உள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று சீக்ரெட் சர்வீஸ் பத்திரப்படுத்தி உள்ளது எனும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த வன்முறையை எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.