அண்ணாமலைக்காக இந்த திட்டத்தை கொண்டு வரல.. உபரி நீர் வந்ததால் தொடங்கியிருக்கோம் : அமைச்சர் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2024, 2:42 pm

ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ் புறத்தில் 1916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் திருப்பூர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

பவானி ஆற்றில் உபரி நீராக வெளியேறும் நீரை காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் தேக்கி ஆண்டிற்கு 70 நாட்கள் வினாடிக்கு 250 கன அடி வீதம் 1.5 டி.எம்.சி நீரை 6 நீரேற்று நிலையங்கள் வழியாக 1065 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு ஈரோடு திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 1045 குளம் குட்டைகளில் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர் செரிவூட்டப்படுகின்றது.

இதன் வாயிலாக 24,468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றது.  இதன் மூலம் மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி இத்திட்டத்திற்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதன் பிறகு பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் விவசாயிகள் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பவானி அடுத்த காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரி நீரை பம்ப் செய்ய மூன்று மோட்டார் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவில்லை.

இதனால் பைப்லைன் போடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திட்டத்தை விரைவுப்படுத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த மூன்று முதல் மோட்டார் பம்ப் ஹவுஸ் பகுதிகளில் இடம் வாங்கப்பட்டது. அதன் பிறகு பணிகள் துரித படுத்தப்பட்டு கடந்த ஜனவரி 2023 முடிவடைந்தது. ஆனால் பவானி ஆற்றில் உபரி நீர் வரவில்லை.

தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வருகிறது நேற்று ஆயிரம் கன அடி வந்தது. இன்று அது குறைந்து. காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் கால்வாய்  இருந்து 1.5 டிஎம்சி மொத்தம் உள்ள ஆறு நீரேற்று நிலையங்கள் மூலம் மூலம் ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள 1045 குளங்களுக்கும் அனுப்பப்படும்.

முக்கிய பைப் லைன் எட்டு அடி விட்டம் உள்ளது.அது 105 கிலோமீட்டர் உள்ளது. இதை தவிர குளங்களுக்கு செல்லும் பீடர் லைன் சுமார் ஆயிரத்து 65 கிலோ மீட்டர் உள்ளது. நாங்கள் சோதனை செய்தபோது சில இடங்களில் பழுதடைந்து இருந்தது.

அதை எல்லாம் நாங்கள் சரி செய்தோம். கீழ்பவானி பாசன கால்வாய்க்கு 15ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிலிருந்து வரும் கசிவு நீர் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குள் காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதிக்கு வந்துவிடும்.

இதை தவிர பவானி ஆற்றில் பெய்த மழையால் தற்போது அணைக்கட்டு பகுதிக்கு உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தற்போது இங்கிருந்து நீர் 1045 குளங்களுக்கும் அனுப்பப்படுகிறது. 

மொத்தமுள்ள 1045 குளங்களில் 1020 குளங்களுக்கு நீர் சென்றுவிடும். ஒரு சில இடங்களில் பைப் லைனில் பழுது உள்ளதால் அங்கு தண்ணீர் செல்லவில்லை. அதுவும் சரி செய்யப்பட்டு விடும். கீழ் பவானி கால்வாயில் இருந்து பத்து அல்லது 15 தினங்களில் உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வந்துவிடும்.

அதன் பிறகு தொடர்ந்து 70 நாட்களுக்கு இங்கிருந்து 1.5 டிஎம்சி நீர் 1045 குளங்களிலும் நிரப்பப்படும் பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் இதை திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கேட்டுள்ளார். உபரி நீர் தற்போது தான் வந்துள்ளது. அதனால் தான் திட்டத்தை இப்போது துவக்கி வைத்துள்ளோம்..

உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வராமல் இருந்தால் இத்திட்டத்தை துவக்கி வைத்து குளங்களுக்கு நீர் அனுப்ப முடியாது. ஒரு தடை ஏற்பட்டிருக்கும். அப்போது அரசை அண்ணாமலை குறை சொல்வார். எனவே தான் இந்த அரசு கவனமாக உபரி நீர் வந்த பிறகு திட்டத்தை துவக்கி வைத்துள்ளது.

இந்த அரசு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டது என கூறியுள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 314

    0

    0