பூமி பூஜைக்கு என்னை கூப்பிடாதீங்க.. எனக்குனு வந்து வாய்ச்சிருக்கீங்க.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி : சொந்த கட்சியினரே கடும் கோபம் !!

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2022, 2:26 pm

தருமபுரியில் அரசு நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளரை லெப்ட் அண்டு ரைட் வாங்கிய எம்பி செந்தில்குமார்.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுபாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து சுமார் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன நூலக கட்டிடம் கட்ட கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூமி பூஜையை முடிந்த பிறகு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் திமுக நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் இருவரையும் அழைத்த தருமபுரி எம்பி செந்தில்குமார் இது போன்ற சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காதீர்கள்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. இது போன்ற அரசு நிகழ்ச்சிகளில் அனைவருக்கும் ஏற்றால் போல் சமமான ஒருங்கிணைக்க வேண்டும். சடங்குகள் நிறைந்த ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியாக நடத்த கூடாது.

அப்படி கடைப்பிடிப்பதாக இருந்தால் தன்னை கூப்பிடாதீர்கள் என பலமுறை உங்களிடம் கூறியும் தொடர்ந்து இதுபோல் செய்து வருகிறீர்கள். ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை செய்ய வேண்டுமா என தருமபுரி எம்பி செந்தில்குமார் காட்டமாக பேசி வெளியேறினார்.

இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்ததை கண்டித்து அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடபட்டார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் அரசு நிகழ்ச்சியில் தொடர்ந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மதசம்மந்தமாக பிரச்சனை கிளப்பி வருவது தருமபுரி மாவட்டத்தில் உள்ள திமுகவினரிடையே சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!