திருமா எங்களை மாநாட்டுக்கு கூப்பிடல.. நான் ஏதாவது பேசி காயப்படுத்த விரும்பல : செல்வப்பெருந்தகை சுளீர்!
Author: Udayachandran RadhaKrishnan11 செப்டம்பர் 2024, 4:52 மணி
மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள KRI ஏரோநாட்டிக்ஸ் எனும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை மாணவர்களிடையே சிறப்பு உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்குத்தான் அழைப்பு விடுத்திருக்கிறார். எங்களுக்கு இதுவரை அழைப்பு கொடுக்கவில்லை, காங்கிரசுக்கு அழைப்பு விடுகிறோம் என அழைப்பு விடுத்திருந்தால் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து தலைமையிடம் பேசி முடிவெடுப்போம் என்றார்.
டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் தேர்தல் நேரத்தில் எந்த எந்த இடங்களில் போட்டியிடுவோம் என்பது குறித்து கலந்து பேசி தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம் என்றார்.
எந்தக் கட்சித் தலைவர் வந்தாலும் காவல்துறையினர் அந்தந்த கட்சி தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும். நினைவிடம் செல்வதற்கு முன்னதாகவே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டதால் எங்களுடைய தோழர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆனால் நம்மளுடைய ஆட்சியில் இதுபோன்று செய்யக்கூடாது என அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். இனிவரும் காலங்களில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
எல்.முருகனுக்கு எந்த அறிவு ஜீவி திராவிடம் போலி திராவிடம் என சொல்லிக் கொடுத்தது என தெரியவில்லை திராவிடம் போலி திராவிடம் குறித்து எந்த டிஸ்னரியில் எல்.முருகன் படித்தார் என்பதும் தெரியவில்லை. நான் ஏதாவது சொன்னால் அவர்கள் மனசு கஷ்டப்படும் நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்றார்.
மகாவிஷ்ணுவை யார் பள்ளியில் பேச அனுமதி தந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகிறோம். விஞ்ஞான யுகம் நடந்து கொண்டிருக்கிறது.
அவர் மோடியிடம் கற்றுக் கொண்டாரா என தெரியவில்லை.? ஒரு குப்பனோ, சுப்பனோ பேசி இருந்தால் பெரிதாக இருந்திருக்கிறது.! மகாவிஷ்ணு இப்படி பேசி இருக்கிறார்.
விஞ்ஞான யுகத்தில் இருந்து கொண்டிருக்கும் காலத்தில் முற்பிறவியில் நீங்கள் செய்த பாவத்தால் ஊனமுற்றவராக பிறந்திருக்கிறீர்கள் என பேசி இருப்பது மூடத்தனமான முட்டாள்தனமான நபர் என்பது காட்டுகிறது. மனுநீதியை மீண்டும் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பேசியிருக்கிறார்.
சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கு எங்களைப் பொறுத்தவரை இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு திருமாவளவன் கூட்டணியில் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார் ஆனால் தமிழக பிரச்சினைக்காக மாநாடு நடத்துகிறோம் என்று தெளிவாக கூறியுள்ளார் 2026 ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்வுகளை சந்திப்போம் என்றும் தெரிவித்தார் இந்தியா கூட்டணி சிந்தாமல் சிதறாமல் 2026 தேர்தலை இணைந்து சந்திப்போம் என அவர் பேசினார்.
0
0