என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க..தாங்க மாட்டீங்க : பிக் பாஸ் நடிகரின் ட்வீட்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2023, 5:51 pm

தமிழ் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ். அவர் அந்த சீசனின் இரண்டாம் இடத்தை பிடித்தார். அடுத்து அவர் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தார்.

பிக் பாஸ் மூலமாக கிடைத்த புகழை வைத்து அவருக்கு ஹீரோ வாய்ப்பும் தேடி வந்தது. அவர் தயாரிப்பாளர் ரவீந்தர் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வந்தது. ஆனால் அந்த படம் என்ன ஆனது என எந்த அப்டேட்டும் வரவில்லை.

இந்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என முதலமைச்சரை கேட்டிருக்கும் அவர், மது கடைகளால் தன்னை போன்ற ஆதரவற்றவர்கள் உருவாகிறார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.

‘என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள், உங்களால் சமாளிக்க முடியாது’ வேண்டும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ட்விட் வைரல் ஆன நிலையில் பாலாஜி முருகதாஸ் பீரில் குளிக்கும் பழைய புகைப்படத்தை நெட்டிசன்கள் கமெண்டில் பதிவிட்டு வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!