உணர்ச்சிவசப்படாதீங்க.. அது ரொம்ப தப்பு : பாஜகவினருக்கு அண்ணாமலை வார்னிங்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2023, 10:33 am

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறி அவருடைய உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, ஓபிஎஸ் உடன் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் இறப்பிற்கு நேரில் ஆறுதல் கூறியுள்ளேன். மேலும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறியுள்ளார். வடமாநிலத்தவர்களுக்கு பாஜக எப்போதும் ஆதரவாக இருக்கும். வட மாநிலத்தவர் விவகாரத்தில் திமுகவே குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டி விடுகிறது.

கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி உருவ படத்தை எரித்தது பற்றி எனக்கு தெரியாது. நான் மதுரை விமான நிலையத்தில் இருந்து தேனிக்கு நேராக வந்துவிட்டேன். கூட்டணி கட்சி தலைவர்களை இது மாதிரி பண்ணாதீங்க அது ரொம்பவும் தவறு. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பாஜகவினர் வழங்க வேண்டும். உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

கூட்டணி தலைவர்களுக்கு தார்மீக அடிப்படையில் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். கட்சியின் கொள்கையின் அடிப்படையில் தொண்டர்கள் செயல்படவேண்டும். நடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஈரோடு இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டம் என்று திமுக கூட்டணி கட்சியினர் பேசி வருவது ஒரு வேலை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!