வாய்க்கு வந்ததை பேசக்கூடாது : திமுக அரசு மீது சேற்றை வாரி இறைப்பதா.. எல்.முருகன் மீது பெண் அமைச்சர் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 1:42 pm

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (20.08.2024) காலை நடைபெற்ற நல திட்டங்கள், மற்றும் அரசாணை வழங்கும் நிகழ்ச்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சி புதுக் கிராமத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் குத்து விளக்கு ஏற்றி வைத்தும் கல்வெட்டை திறந்தும் அலுவலக வளாகத்தினை பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன், உதயநிதி துணை முதல்வரானால் தமிழ்நாட்டிற்கு திமுகவால் ஒன்றும் மாற போவது இல்லை.. தமிழ்நாடு அரசாங்கம், தமிழக அமைச்சர்கள் மக்களுக்கு என்ன தீங்கு செய்து கொண்டிருக்கிறார்களோ அது இரட்டிப்பாகும் என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டினார்… இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? அவர் கருத்தை முற்றிலுமாக மறுக்கின்றேன்.

வாய்க்கு வந்ததை அமைச்சர் எல்.முருகன் பேசக்கூடாது.. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள், தொண்டர்கள் முடிவு செய்து முதலமைச்சரிடம் கோரிக்கையாக அளித்துள்ளோம்.. இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்.. பிற கட்சியை சேர்ந்தவர்கள் அவர் கருத்தை சொன்னாலும் நல்லதுக்கானது என்று எடுக்க முடியாது… திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது வாய்க்கு வந்ததை பேசி சேற்றை வாரி இறைப்பது நல்லதல்ல என்றார்….

  • Sathyaraj family political problem கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!