இந்துக்களை இழிவுப்படுத்தி பேசும் கட்சிகளுக்கு வாக்களிக்காதீங்க : காடேஸ்வரா சுப்பிரமணியம் வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 8:41 pm

ராமநாதபுரத்தில் இந்து முன்னணி சார்பில் ஹிந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாநில இணை அமைப்பாளர் ராஜேஸ் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்ற காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியபேசியதாவது: ஹிந்துக்களின் கோயில் நிலங்களில் பிற மதத்தினர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். திண்டுக்கல்லில் எம்.எல்.ஏ., காந்திராஜன் அழகான பெண்களுக்கு சம்பளம் நிறைய கிடைக்கும், என பேசியது கண்டனத்திற்குரியது. தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது பேரன் உதயநிதி ஆகியோர் பெண்களை வர்ணித்து பேசியுள்ளனர்.

இதற்கெல்லாம் மேலாக வி.சி.க திருமாவளவன், எங்கள் இளைஞர்களுக்கு சக்தி, திறமையுள்ளதால் கலப்பு திருமணம் செய்கின்றனர், என பேசுகிறார். எனவே, சுயநலமிக்க ஹிந்துக்கள் நம்மை இழிவுப்படுத்தும் கட்சிகளுக்கு ஓட்டு போடக் கூடாது, என்றார்.

மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், வீரபாண்டி, சேர்மன், ராமேஸ்வரம் மடம் மாதாஜி லட்சுமியம்மாள், பா.ஜ.,வினர், பூஜாரிகள் பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 870

    0

    0