அரசு விரைவு பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு சென்னை பஸ் செயலி’ மூலம் பஸ்களின் இருப்பிடத்தினை அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளது என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை சென்னை பஸ் செயலி (Chennai Bus App) மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது.
இதனை தொடர்ந்து தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் GPS பொருத்தப்பட்டு Chennai Bus App மூலம் இச்சேவை விரிவு படுத்தப்பட உள்ளது.
இதன் மூலமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களது பயணத்தை மேற்கொள்ளலாம் மற்றும் பேருந்து தடம் குறித்த Search Route option-யை Click செய்து குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்து பேருந்துகளின் விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
தேவையான தடத்தினை தேர்ந்தெடுத்து Click செய்வதன் மூலம் தற்போது அந்த தடத்தில் வருகின்ற பேருந்துகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
பேருந்தின் நிகழ்நிலை இருப்பிட விவரத்தின் பகிர்வு (Live Location sharing) மூலமாக பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இருப்பிட விவரத்தினை பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுந்தகவல்(S.M.S) மூலமாக அனுப்பும் வசதி உள்ளது.
பயணிகள் தங்களது பயணம் குறித்த கருத்துக்களை (Feed Back) பதிவு செய்து அனுப்பும் வசதியும் உள்ளது. மேலும், இச்செயலி மூலம் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு SMS அனுப்பப்படும் Link-யை கிளிக் செய்வதன் மூலம் அவர்களது முன்பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் வருகிறது என்ற விபரத்தையும் அறியலாம்.
மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் வருகையினை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப புறப்பாட்டினை திட்டமிட இச்செயலி பயன்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.