பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு நிற ஆடை அணியக்கூடாது : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2024, 4:58 pm

மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழா ஆடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவின்போது அணியப்படும் கருப்பு நிற ஆடை, ஆங்கிலேயர் ஆட்சியர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனால், இந்த காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் பட்டமளிப்பு விழாவில் கருப்பு வண்ண ஆடைகளுக்கு பதிலாக இனி இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி