சென்னை : மயிலாப்பூர் அருகே ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து புதைத்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (வயது 60). இவரது மனைவி அனுராதா (வயது 55).
இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 03.30 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து இவர்களது ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் இவர்களை அழைத்து வந்து வீட்டில் இறக்கியுள்ளார்.
இதையடுத்து அமெரிக்காவில் இருந்து அவரது மகள் சுனந்தா, தனது பெற்றோரைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அப்போது தனது தாய், தந்தை இருவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகிருந்ததால், சந்தேகம் அடைந்த சுனந்தா, இந்திரா நகரை சேர்ந்த தனது உறவினரான திவ்யாவை தொடர்புகொண்டுள்ளார்.
இதையடுத்து திவ்யா தனது கணவர் ரமேஷ்சுடன் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டிற்கு மதியம் 12.30 மணி அளவில் சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்துள்ளது.
அதிகாலை சென்னை வந்தவர்கள் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவர்கள், பூட்டியிருந்த வீட்டை உடைக்க திட்டமிட்டனர்.
அக்கம் பக்கம் இருப்பவர்களின் உதவியுடன் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் இல்லாத காரணத்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல், உதவி ஆணையர் கவுதமன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், மாலை சுமார் 6.30 மணியளவில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடி அருகே காரில் சென்று கொண்டு இருந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பரைப் பிடித்துள்ளனர்.
டிரைவர் கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து, கிழக்கு கடற்கரைச் சாலை, நெமிலிசேரி கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் செயல்பட்டு வரும் இடத்திற்கு எதிரே உள்ள ஸ்ரீகாந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்ததும் தெரிய வந்தது.
இருவரையும் கொலை செய்து ஈசிஆர் பண்ணைவீட்டில் புதைத்து விட்டு, இருவரும் பீரோவில் இருந்த சுமார் ரூபாய் 20 லட்சம் பணம் , நகை ஆகியவற்றைக் கொள்ளை அடித்து விட்டுச் சென்றுள்ளதும் தெரியவந்தது.
கொலையாளி கிருஷ்ணா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார். இருவரின் சடலங்களும் கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பல நாள் திட்டமிட்டு ஓட்டுநர் செய்த கொலை சம்பவம் சென்னையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.