கஸ்தூரி வீட்டையே வீடியோ எடுத்து போட்டுட்டாங்களே : X தளத்தில் மோதும் பிரபலங்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2024, 12:45 pm

சென்னையில் பெய்த கனமழை குறித்து X தளத்தில் திமுக ஆதரவாளரான ஷர்மிளாவும், பாஜக ஆதரவாளருமான கஸ்தூரியும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கோவை, மதுரையில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் நேற்றும், இன்றும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது.

இதனிடையே நேற்று பெய்த மழை குறித்து சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் பாராட்டும் முன்வைத்தனர்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி திமுக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்திருந்தார். இதனிடையே விசிக எம்எல்ஏ பாலாஜியின் மனைவியும் , சமூக ஆர்வலருமான டாக்டர் ஷர்மிளா தனது X பக்கத்தில் ஒரு பதிவை போட்டார்,

அதில், மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.ஏதோ சொல்லணும்னு தோணிச்சு… சொன்னேன் என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு ரிப்ளை பதிவிட்ட நடிகை கஸ்தூரி, ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல .
உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம் என பதில் கொடுத்தார்.

இதற்கு ரிப்ளை செய்த ஷர்மிளா, வந்துட்டாய்யா வரிஞ்சுகட்டிகிட்டு! சங்கிகளுக்கு பிடில் வாசிக்கிறது உங்களுக்கு கை வந்த கலையாச்சே! என்னேரமும் தண்ணியில இருந்தா, எல்லாமே தண்ணியாத்தான் தெரியும்.இது உங்க வீடு தாணே மேடம்! முழங்கால் அளவுக்கு கூடத் தண்ணியில்லை, இதுல முட்டி வரைக்கும் த‌ண்ணி நிக்குதுன்னு பொய் வேற என கஸ்தூரி வீட்டையே வீடியோ எடுத்து போட்டுள்ளார். இருபிரபலங்களின் மோதலுக்கு நெட்டிசன்கள் இருதரப்பினருக்கும் ஆதரவாக எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 286

    0

    0