ஒத்துழைப்பு தராமல் இழுத்தடிக்கிறார்.. செந்தில்பாலாஜி மீது ED குற்றச்சாட்டு: Court போட்ட உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2024, 8:38 pm
ஒத்துழைப்பு தராமல் இழுத்தடிக்கிறார்.. செந்தில்பாலாஜி மீது ED குற்றச்சாட்டு: Court போட்ட உத்தரவு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், ‛‛சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்.
வழக்கை 3 மாதங்களில் முடிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து, அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், 35வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.