திராவிட மாடல் பயிற்சி கூட்டத்தில் பரோட்டாவுக்காக கைகலப்பு… உணவு பற்றாக்குறையால் திமுக நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு…!

Author: Babu Lakshmanan
20 June 2022, 12:49 pm

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில், உணவுக்காக திமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தண்டையார்பேட்டையில் உள்ள திருமண மண்டத்தில், திமுக சார்பில் இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில், திமுகவைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்திற்கு பிறகு அங்கிருந்தவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, அங்கேயே உணவு தயாரிக்கப்பட்டு வந்தது.

கூட்டம் அதிகமாக இருந்ததால், தயாரிக்கப்பட்ட உணவு பாதி பேருக்கு மட்டுமே சரியாக இருந்ததால், மீதி பேருக்கு மீண்டும் உணவு தயாரிக்க தாமதமானது. இதனால், ஆத்திரமடைந்த திமுக இளைஞர்கள், நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் உணவு தயாரிக்கும் இடத்திற்கே சென்று பரோட்டா போடும் மாஸ்டரிம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுத்த பிறகு, அதனை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.

உணவுக்காக அங்கிருந்தவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால், கிடைத்த உணவுகளும் கீழே கொட்டி வீணாகியது. இதனால், ஆத்திரமடைந்த சிலர், தாங்கள் அணிந்திருந்த அடையாள அட்டைகளை ஆங்காங்கே வீசி விட்டு புறப்பட்டு சென்று விட்டனர். இது விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 573

    0

    0