தேர்தலுக்காக நாடகம்.. அதிமுக தான் பாஜக.. பாஜக தான் அதிமுக : மீண்டும் சீண்டும் அமைச்சர் உதயநிதி!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2023, 8:25 am
தேர்தலுக்காக நாடகம்.. அதிமுக தான் பாஜக.. பாஜக தான் அதிமுக : மீண்டும் சீண்டும் அமைச்சர் உதயநிதி!!
சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மறைந்த அம்மையார் ஜெயலலிதா தைரியமாக கேட்டார் மோடியா..? லேடியா என்று கேட்டார்.
ஆனால், அம்மையாரின் மறைவுக்கு பின், இவர்கள் மோடி தான் எங்கள் டாடி என்கிறார்கள். மக்கள் பிரச்சனையை பேச சொன்னா சீட்டுக்கு சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அதிமுகவுக்கு இப்போவுமே பிரச்னை நாற்காலிதான். பாஜகவும், அதிமுகவும் கூட்டணி முறிவு என்ற நாடகத்தை தொடங்கியுள்ளனர்.
இது புதிதல்ல, ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் இப்படி நடப்பது வழக்கம் தான். பாஜக- அதிமுக கூட்டணியா முறிவு என்பது வெறும் நாடகம் தான். நாம் ஏமாறுவோம் என்று நினைக்கிறோம். ஆனால் தமிழக மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தமிழக மக்களை பொறுத்தவரையில், அதிமுக, பாஜக இரண்டுமே ஒன்று தான். பாஜக தான் அதிமுக. அதிமுக தான் பாஜக. இவர்கள் தனியாக வந்தாலும் சரி, சேர்ந்து வந்தாலும் சரி வெல்லப்போவது திமுக தான், இந்திய கூட்டணி தான் என தெரிவித்துள்ளார்.