தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. 3 சீனியர் அமைச்சர்கள் நீக்கம் : முக்கிய தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 10:51 am

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 3ஆண்டுகள் முடிவடைந்து 4வது ஆண்டை நோக்கி செல்கிறது.

இந்த நிலையில் பல்வேறு மக்கள் நில திட்டங்களால் மக்களிடம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக விடியல் திட்டம், மகளிர் உரிமை தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களால் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்ப தலைவிகள் முதல் கல்லூரி மாணவ,மாணவிகள் வரை கிடைக்கிறது. இந்தநிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து தமிழகத்திற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாடு பயணம் என தொடர் நிகழ்வுகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்ட்டுள்ளது.

இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். 17 நாட்கள் பயணமாக இந்த பயணம் அமையவுள்ளது.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பயணம் அமையவுள்ளது. முக்கிய தொழில் அதிபர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே முதலமைச்சர் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்லும் முன்பாக தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3ஆண்டில் அமைச்சர் நாசர் மட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சராக உதயநிதி மற்றும் டிஆர்பி ராஜா இடம்பெற்றனர். ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது துணை முதலைமைச்சராக உதயநிதியும் நியமிக்கப்படவுள்ளார்.

இதைபோல திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், சேலம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினரான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் தற்போதைய தமிழக அமைச்சரவையில் உள்ள பாலவளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காதர் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பு இன்று மதியம் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை தினம் பதவியேற்பு நடைபெற இருப்பதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தலைமைசெயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!