திமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகுவதுதான் திராவிட மாடல் ஆட்சி : கோவையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 8:35 am

நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவாகரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது என்றும் திமுகவில் முக்கிய தலைவர் ஒவ்வொருவராக விலகுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

டெல்லி சென்று திரும்பிய அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இன்று உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கியமான சில விஷயங்களை பேசினோம்.

அதில் கோதாவரி – காவரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் போதை பொருள் அனைத்து பகுதியிலும் தடையில்லாமல் கிடைக்கிறது. இது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் என்று தெரிவித்தார்.

திமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் விலகுவது தான் திராவிட மாடல் என்றும் ஆ.ராசா கீழ்தராமான, இந்து மதத்தை புண் படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கதக்கது என்று தெரிவித்த அவர், ஆ.ராசா குறிப்பிட்டு பேசிய அந்த வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா ? அல்லது அவரது மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே அவருக்கும் பொருந்துமா என்று கேட்டேன்.
இன்னும் அவரது கட்சி தலைவர் உரிய பதிலளிக்கவிக்லை என்று தெரிவித்தார்.மேலும் அதிமுக உட்கட்சி விவாகரம் குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும், நீதிமன்ற தீர்ப்பு வரும் போது நீங்களே தெரிந்து கொள்வீரகள்.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதை பற்றி பேசினால் அது வழக்கிற்க்கு தடையாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவாகரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது.

விடியா திமுக ஆட்சியில் எதும் நடைபெறாமல் இருப்பது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வைக்கதான் டெல்லி சென்றதாகவும்,அவர் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் காய்ச்சல் பரவலைக் தடுக்க இந்த அரசு விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் மருத்துவகுழு உரிய முறையில் ஆராய்ந்து காய்ச்சல் பரவலைக் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி