போதைப் பொருள் கடத்தல் வழக்கு எதிரொலி.. ஜாபர் சாதிக் , இயக்குநர் அமீர் வீட்டில் ED ரெய்டு.!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 8:53 am

போதைப் பொருள் கடத்தல் வழக்கு எதிரொலி.. ஜாபர் சாதிக் , இயக்குநர் அமீர் வீட்டில் ED ரெய்டு.!!

ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதே போல் இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு உள்ளிட்ட சென்னையில் 25 இடங்களில் வருமான அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.

கொடுங்கையூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் திரைப்பட அக்கவுண்ட்ஸ் மேனேஜர் ரகு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

போதைப் பொருள் வழக்கில் மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

இதேபோல், சென்னை தி.நகரில் உள்ள இயக்குனர் அமீர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!