எங்க பார்த்தாலும் போதைப் பொருள்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் ஏன் ராஜினாமா செய்யல? கும்பகர்ண தூக்கமா? இபிஎஸ் கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 12:20 pm

எங்க பார்த்தாலும் போதைப் பொருள்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் ஏன் ராஜினாமா செய்யல? கும்பகர்ண தூக்கமா? இபிஎஸ் கேள்வி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டதில் 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 874 கிலோ எடையுள்ள கஞ்சா பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 110 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக சுல்தான் என்பவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திமுக அரசை விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த விடியா ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது.

அஇஅதிமுக ஆட்சியில் தனக்கு தும்மல் வந்தாலும் நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன இன்றைய முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?

அஇஅதிமுக ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், தற்போது திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்?

தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு காவல்துறை, கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் விடியா முதல்வரைப் போலன்றி, துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu