அண்ணாமலை ஐயா! நீங்கதான் கேட்கணும்: ரொம்ப அவமானமா இருக்கு: போலீசுக்கு போக்கு காட்டிய குடிமகன்…!!

Author: Sudha
19 August 2024, 1:32 pm

சென்னை பாரிமுனை அருகே, காரை சென்டர் மீடியனில் மோத விட்ட கார் ஓட்டுநர், மது போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பாரிமுனை முத்துசாமி பாலம் அருகே, மாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்ததில், சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போக்குவரத்து போலீசார், கார் ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர்.

விபத்து ஏற்படுத்தியவரை விசாரித்த போது, அவரது பெயர் தரணி என்றும் அவர் அதிகளவில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதும் தெரியவந்தது. அத்துடன் தகுந்த ஆவணங்களைத் தராமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அத்துடன், தான் பாஜகவை சேர்ந்தவர் என்பதாலேயே தன்னை அவமானப் படுத்துவதாக புலம்பித்தள்ளினார்.தான் எந்த தவறும் செய்யவில்லை எனக் குமுறிய அந்த போதை ஆசாமி, இங்கேயே தூக்கு மாட்டிக் கொள்வேன் எனக் கூறி போலீசாரை மிரட்டினார்.

மேலும் அண்ணாமலை ஐயா நீங்கதான் கேட்கணும் எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு எனக் கூறி அதிரச் செய்தார்.

ஒரு வழியாக காரை அப்புறப்படுத்தி, போதை ஆசாமியை அனுப்பி வைத்த நிலையில், குடி போதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்கான அபராதம் விதித்துள்ளதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!