நடு ரோட்டில் மல்லாக்க படுத்து மல்லு கட்டிய குடிமகன்: உச்சக்கட்ட போதையிலும் உரக்க சொன்ன பஞ்ச் டயலாக்..!!

Author: Sudha
9 August 2024, 3:02 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஜங்சனில் மது பிரியர் ஒருவர் ஃபுல் போதையில் தடுமாறி வந்து அதிக வாகனம் செல்லக்கூடிய நடு ரோட்டில் மல்லாக்க விழுந்து படுத்துக்கொண்டார்.

மீண்டும் எழுந்து நடக்க முயன்ற போது மீண்டும் மல்லாக்க விழுந்தார்.அவ்வழியே சென்ற இரண்டு பேர் மது பிரியரை சாலையோரம் அமர வைக்க முயற்சித்த போது இரவு நேர ரோந்து காவலர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.அங்கு வந்த காவலர்களோ ஏன்பா என்ன ஆச்சு? எனக் கேட்க என்னை அடித்து விட்டார்கள் என்று கூறினார்.

போலீசாரோ அன்பாக பேசி நாங்க வந்திருக்கோம்ல எந்திரிப்பா எனக்கூறி அருகில் இருந்தவர்களை அழைத்து இழுக்க முடியாமல் இழுத்துசாலை ஓரத்தில் படுக்க வைத்தனர்.

மீண்டும் எழுந்த மது பிரியரோ சார்..நல்லவங்களுக்கு உதவி பண்ண மாட்றீங்க கெட்டவங்களுக்கு தான் உதவி பண்றீங்க எனக்கூறி அந்த இடத்திலேயே மட்டை ஆகினார்.இந்த நள்ளிரவு சம்பவத்தால் அங்கு இருந்தவர்களிடையே வேடிக்கையாக இருந்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 209

    0

    0