தேர்தலுக்காக துபாய் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணம்… மலேசியா ரிட்டர்ன் ஷாக்… சிக்கலில் தமிழக அரசியல் கட்சி..!!

Author: Babu Lakshmanan
10 April 2024, 8:32 am

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சி ஒன்றுக்கு துபாயில் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணம் கொண்டு வர திட்டம் தீட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தும் சோதனைகளில் அடுத்தடுத்து ரொக்கம் சிக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: அழைத்தும் பிரச்சாரத்திற்கு வராத சசிகலா…? தேனியில் டிடிவி மனைவி பிரச்சாரம் ஏன்…? அப்செட்டில் டிடிவி, ஓபிஎஸ்…!

குறிப்பாக, நேற்று முன்தினம் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடியுடன் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நடத்தும் ஹோட்டல் ஊழியர்கள் சிக்கினர். இந்த விவகாரம் தொடர்பான பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில், பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார் ஜோசப் எனபவரை விமான நிலையத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிக்கு தேர்தல் செலவுக்காக ரூ.200 கோடியை ஹவாலா நெட்வொர்க் மூலம் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மேலும் படிக்க: திமுகவினருக்கு வரும் வியாதி… தேர்தல் நேரத்தில் மட்டும் விபூதி அடிச்சுப்பாங்க ; வானதி சீனிவாசன் விமர்சனம்!!!

இதைத் தொடர்ந்து, ஹவாலா மூல பணத்தை கொண்டு வர முயற்சித்த கட்சி எது..? என்பது குறித்து வினோத்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இது தொடர்பான வழக்கு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 335

    0

    0