திருப்பதி மலைப்பாதை மூடல்.. கனமழை எதிரொலியால் தேவஸ்தானம் முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2024, 5:57 pm

கனமழை எதிரொலியால் திருப்பதி திருமலையில் மலைப்பாதையை நாளை வரை மூட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமாளா ராவ் காணொளி காட்சி மூலமாக அதிகாரிகளுடன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் பேசிய ஷியாமளா ராவ் கனமழை காரணமாக வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு திருமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையை நாளை 17 ம் தேதி முழுவதும் மூடி பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தேவஸ்தானத்தில் ​​பேரிடர் மேலாண்மைத் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் பல ஆலோசனைகளும் வழங்கி பேசுகையில் கனமழையின் போது பணியாளர்கள் விழுப்புடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மலைச்சரிவுகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொண்டு மலைப்பாதை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மின்சாரம் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெனரேட்டர்களுக்கு டீசல் தட்டுபாடு இல்லாமல் இருக்க மின் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு பக்தர்களின் தரிசனம், தங்குமிடம், பிரசாதம் போன்ற அன்றாட செயல்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்று வழியைக் ஏற்பாடு செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மருத்துவத் துறை ஆம்புலன்ஸ் வசதி செய்து ஊழியர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும். நீர்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்க பொறியியல் துறைக்கு உத்தரவிட்டார்.

மலைப்பாதை மண் சரிவு ஏற்பட்டால் உடனடியாக அகற்ற ஜேசிபிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து போலீசார், பொறியியல் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஏதேனும் அவசரச் சூழல் ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

வானிலை தகவல்களை வைத்து பக்தர்களை எச்சரிக்கும் வகையில் ஊடகம், சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் தொடர்பு துறை அறிவுறுத்தினார்.

பாபவினாசனம் மற்றும் சீலா தோரணம் வழித்தடங்களை ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. வானிலை நிலையைப் பொறுத்து இந்த வழித்தடங்களில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் இணை செயல் அதிகாரிகள் கௌதமி, வீரபிரம்மம், முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், முதன்மை பொறியாளர் சத்திய நாராயணா மற்றும் பிற துறை தலைவர்கள் பங்கேற்றனர்.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…