மிஸ்டர் அண்ணாமலை…. திராவிட அரசியலை சும்மா நினைச்சுக்காதீங்க ; துரை வைகோ ஆவேசம்..!!!

Author: Babu Lakshmanan
16 September 2023, 9:05 am

மிஸ்டர் அண்ணாமலை முகலாயர்களால், பிரிட்டிஷ்காரர்கள், கிறிஸ்தவ அமைப்புகளால் செய்ய முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியது என்று மதிமுக முதன்மை நிலை செயலாளர் துரை வைகோ ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் விழா மாநாடு மதுரை வளையங்குலம் பகுதியில் நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மை நிலை செயலாளர் துரை வைகோ மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய துரை வைகோ பேசியதாவது :- சனாதன கலாச்சாரம் குலக்கல்வி திட்டத்தை ஊக்குவிக்கிறது. சனாதன தர்மம் பெண் விடுதலைக்கு எதிரானது. குழந்தை திருமணத்தை வற்புறுத்தியது. பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்றது. மானத்தை காக்க மேலாடை அணியக் கூடாது. இதைத்தான் பெரியார், அண்ணா மற்றும் 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் எதிர்க்கிறது.

மிஸ்டர் அண்ணாமலை, முகலாயர்களால், பிரிட்டிஷ்காரர்கள், கிறிஸ்தவ அமைப்புகளால் செய்ய முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியது. 50 ஆண்டுகளுக்கு முன்பாக சனாதனத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. அதற்கு காரணம் அம்பேத்கரும், அண்ணாவும், பெரியாரும் தான். சாதனத்தை வேறோரு அறுப்பது அனைவரின் கடமை. இரண்டு பிறவியில் கொடுக்க வேண்டிய உழைப்பை தலைவர் வைகோ ஒரு பிறவியில் கொடுத்துள்ளார். இந்த மாநாடு வெற்றி அடைந்துள்ளது. இன்று இரவு தலைவர் நிம்மதியாக உறங்குவார்.

தலைவரின் சுமையை குறைக்க அரசியலுக்கு வந்தவன் நான் இல்லை. உங்களால் இழுத்து வரப்பட்டவன் நான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு. அப்போது இயக்கத்தை கலைக்க முற்பட்டவர்களை களையெடுத்தவன் நான். அரசியல் ஆசை எனக்கில்லை. அதனால் தான் சட்டமன்றத்தில் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. யூதாஸை மன்னித்த இயேசு நாதரின் உள்ளத்தை பெற்றவர், மத்திய அமைச்சர் பதவிக்காக இரண்டு மணி நேரம் அத்வானி பேசினார். அதை மறுத்தவர். இந்த இயக்கத்தின் முதன்மை நிலைய செயலாளர் பதவி தேவையில்லை. அடிப்படைத் தொண்டானாக இருக்கிறேன். அது போதும் என்று காட்டும்போது, துரை வைகோ கண் கலங்கினார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 297

    0

    0