இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளருக்கு ஆயிரம் பேரு இருக்காங்க… ஆனால், எங்களுக்கு வில்லன் மோடி மட்டும் தான் ; துரை வைகோ…!!

Author: Babu Lakshmanan
26 December 2023, 12:03 pm
Quick Share

இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அதிகம் பேர் உள்ளதாகவும், ஆனால் எங்களுக்கு வில்லன் என்பது மோடி மட்டும்தான் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை. வைகோ கூறியதாவது :- வெள்ள பாதிப்பு அதிக அளவு இருந்ததால் ஒரு ஆதங்கத்தில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். மக்கள் நலனில் அக்கறை அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் அந்த கருத்தை தெரிவித்தார். மத்திய அரசு நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும் என்று ஆதங்கத்தில் தான் அமைச்சர் உதயநிதி அவர்கள் போன்று பேசினார். இதை நான் தவறாக எண்ணவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமே நிவாரணமாக பத்தாயிரம் கோடி தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தேசிய பேரிடர் நிதியிலிருந்து 1100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அரசியலைக் கடந்து அந்த பகுதி மக்கள் சகஜ நிலைக்கு வர வேண்டும் என்று அனைவரும் நினைக்க வேண்டும். தமிழக முதலமைச்சர வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசிடம் உதவி கேட்கிறார். அந்த நேரத்தில் ஒரு மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் மத்திய அரசு ஆகியவை அந்த பகுதி மக்களுக்கு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். தமிழிசை சௌந்தர்ராஜன் மதிப்புமிக்க பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் வேறொரு மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். கால நிலவரத்தை உணர்ந்து அவர் பேசாதது துரதிஷ்ட வசமானது.

களநிலவரத்தை ஆய்வு செய்வதற்கு தற்போது மத்தியில் இருந்து வருகின்றனர். ஆனால், சம்பவம் நடந்தபோது மத்தியில் இருந்து எந்த ஒரு அமைச்சரும் வராதது ஏன்..? மணிப்பூர் பிரச்சனையில் மத்தியில் இருந்து எந்த ஒரு அமைச்சரும் போகாதது ஏன்…? வட மாநிலத்தவர் குறித்து தயாநிதி மாறன் பேச்சு திரித்து கூறப்பட்டது. அதில் உண்மை இல்லை. அவர் எந்த ஒரு தவறான வார்த்தையும் பயன்படுத்தவில்லை. அவருடைய கருத்தை நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன்.

தமிழகத்திலிருந்து செல்பவர்கள் ஆங்கிலம் தெரிவதால் நாம் அங்கு தமிழகத்திலிருந்து செல்பவர்களுக்கு எளிதாக வேலை வாய்ப்பு பெற முடிகிறது. ஆனால், வட மாநிலத்தவர்கள் ஹிந்தியை மட்டும் தெரிந்து இருந்ததால், அவர்கள் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதைத்தான் தயாநிதி மாறன் கூறினார். ஆனால் அவருடைய கருத்தை திரித்து தேர்தல் ஆதாயத்திற்காக பாஜகவினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதை வடநாட்டில் அதிக அளவு பாஜகவினர் பரப்புரை செய்கின்றனர். தமிழக பாஜகவும் இந்த கருத்தை திரித்து பிரச்சாரம் செய்கின்றனர். சமீபத்தில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் நிதீஷ் குமார் ஹிந்தி குறித்து கூறிய கருத்திற்கு, தமிழக முதல்வரும், அமைச்சரும் நாகரிகம் கருதியும், கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் வந்து விடக்கூடாது என்பதற்காக எந்தவிதமான எதிர்மறை கருத்துக்களும் கூறாமல் அமைதி காத்தனர்.

பிரதமர் வேட்பாளராக இண்டியா கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் ராகுல் காந்தியை முன்னிறுத்தவில்லை என்பது உண்மைதான். கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் தலைவராக உள்ளார். எங்களை பொறுத்தவரை பிரதமராக யார் வர வேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம். அதுதான் எங்களுடைய இலக்கு.
இந்தியாவின் வில்லன் மோடி. அவர் வரக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். இண்டியா கூட்டணியில் கதாநாயகர்கள் நிறைய பேர் உள்ளனர்.

துரை வைகோ தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இதுவரை முடிவு செய்யவில்லை. எங்களுடைய கட்சி எடுக்கும் முடிவு தான் அது, எனக் கூறினார்.

இயற்கை பேரிடர்கள் வரும்போது முதலில் மக்களை காக்க வேண்டியது மாநில அரசின் கடமை மத்திய அரசை குறை கூறுவது தவறு என்று ஆந்திர அமைச்சர் ரோஜா கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ, அது அவருடைய கருத்து அவரது கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை, எனக் கூறினார்.

தமிழக முதல்வரிடம் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு மத்திய அரசு இயற்கை பேரிடர் நாங்கள் உங்களுக்கு உதவியாக இருப்போம் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அதை பிரதமர் செயலில் காட்ட வேண்டும், என்றார்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 282

    0

    0