பெருமாள் குடையை முதலமைச்சரின் மனைவிக்கு பிடிக்கலாமா? சர்ச்சையில் சிக்கிய துர்கா ஸ்டாலின் : வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 5:16 pm

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர கடவுள் பக்தி உள்ளவர். இவரது குடும்பத்தில் இவரை தவிர அனைவருமே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.

இருப்பினும், துர்கா ஸ்டாலினுக்காகவே வீட்டில் பூஜை அறை அமைக்கப்பட்டு தினமும் வழிபட்டு வருவதாக பல்வேறு நேர்காணலில் துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மேல் ஒரு விமர்சனம் எப்போதும் வைக்கப்பட்டு வருகிறது. அது எப்போதும் இவர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார்.

ஆனால் அவர் மனைவியோ பிரசித்த பெற்ற கோவில்களில் வழிபடுவது, பால்குடம், காவடி தூக்குவது என ஆன்மீகத்தில் மூழ்கியுள்ளார்.

துர்காவையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தாலும், அவரது ஆன்மீக பயணம் எப்போதும் போல தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

இந்த நிலையில் திருவொற்றியூரில் உள்ள தியாதராஜ சாமி கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார்.

அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால், அவருடன் வந்தவர்கள் துர்கா ஸ்டாலினுக்கு குடை பிடித்துக்கொண்டே பின் தொடர்ந்தனர். இதில் என்ன சர்ச்சை என்றால், ஒருவர் சாதாரண மழைக்குடையை பிடித்திருக்க, மற்றொருவர், சாமி சிலைக்கு பிடிக்கப்படும் பெருமாள் குடையை துர்கா ஸ்டாலினுக்கு பிடித்தவாறு பின்தொடர்ந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். மேலும் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்கள் முன் வைத்து வருகின்றனர்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!