மருதமலைக்கு செல்ல எதற்கு இ-பாஸ்? பக்தர்கள் கேள்விக்கு கோவில் நிர்வாகம் விளக்கம்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2024, 1:27 pm

கோவை அடுத்த மருதமலை சுப்பிரமணி சாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு பைக் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர். கோவிலில் போதிய இடவசதி இல்லாததால் அதிக அளவில் வாகனங்களை நிறுத்த முடியவில்லை.

மேலும் படிக்க: அதிகாலையில் அலறிய குழந்தைகள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் : நள்ளிரவில் நடந்த கொடூரம்!

இதன் காரணமாக முக்கிய விசேஷ நாட்களில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் கார், நான்கு சக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கோவில் பேருந்தில் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் அறங்காவலர் குழு சார்பில் மலைப் பாதையில் செல்ல கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அதன்படி காலை 6:00 மணி முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் மதியம் ஒரு மணி முதல் மாலை 6:00 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களுக்கு என நாளொன்றுக்கு 300 சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் இ.பாஸ் நடைமுறை குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் கோவில் அலுவலகத்திற்கு தபால் மூலம் அல்லது இணையதளம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 331

    0

    0