சத்தியமங்கலம் பண்ணாரி சாலை;இரவு நடந்த கோர விபத்து; கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி..!

Author: Sudha
27 July 2024, 8:16 am

பண்ணாரி சோதனைச்சாவடியில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்பதால் இரவு 9 மணிக்குள் பண்ணாரி செக்போஸ்டை நெருங்குவதற்காக வேகமாக சென்ற கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் முருகன் கோயில் வளைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி எதிரே வந்த தக்காளி பிக்கப் சரக்கு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் மோதியது.இந்த விபத்தில் காரின் ஒரு பகுதி உருக்குலைந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த 5 பேரில் ஈரோட்டைச் சேர்ந்த முகில் நிவாஷ் , கால்பந்து வீரர் தர்மேஷ், கல்லூரி மாணவர் ரோகித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

அங்கிருந்த கிராமமக்கள் உதவியுடன் போலீசார் விபத்தில் உயிரிழந்த முகில் நிவாஷ் சகோதரர் ஆதி ஸ்ரீவாசன் (18), ஸ்ரீனிவாஷ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவிக்கு பின், மேல்சிகிச்சைக்காக ஈரோடு, கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 377

    0

    0