இந்த முறை கூடுதல் வாக்குப்பதிவு… தேர்தல் விதிமுறைகளில் திடீர் தளர்வு… தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 9:36 pm

தமிழகம் முழுவதும் சுமூகமான முறையில் தேர்தல் நடத்து முடிந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 7 மணி வரை பதிவான வாக்குகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

மேலும் படிக்க: அசந்த நேரத்தில் திமுகவுக்கு ஓட்டு.. 105 வயது மூதாட்டியுடன் அதிகாரிகளை சிறைபிடித்த பாஜக ; கோவையில் பரபரப்பு

அப்போது பேசிய அவர் கூறியதாவது :- 7 மணி வரை 72.09% வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களித்து வருகிறார்கள். அதிகப்படியாக கள்ளக்குறிச்சி 75.76%, மற்றும் தருமபுரி 74.44% மற்றும் குறைந்தபட்சம் மத்திய சென்னை 67.35% பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக
தென் சென்னை 67.85% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த முறையை விட இப்போது அதிகரித்துள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டு 69% இருந்தது. இப்போது 72.09% ஆக உள்ளது. கடைசி வாக்காளர் வரை வாக்கு அளித்த பின்னர், நாளை 12 மணிக்கு இறுதி விபரங்கள் அளிக்கப்படும். தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் தற்பொழுது உள்ள நிலை தொடரும்.

வாக்கு இயந்திரம் தொடர்பான புகார் பெரிதாக வரவில்லை. ஒரு கட்சியிலிருந்து மட்டும் புகார் அளித்துள்ளார்கள். அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். வாக்கு பதிவு இயந்திரங்களிலும் சரி பொது பிரச்சனையும் சரி பெரிதாக இல்லை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சுமூகமான முறையில் தேர்தல் நடைபெற்றது. நிலையான கண்காணிப்பு குழுவும் தேர்தல் பறக்கும் படையும் திரும்ப பெறப்படுகிறது தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் மட்டும் இப்பொழுது உள்ள நிலை , நிலை தொடரும் என கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ