13 மணிநேர சோதனை… நள்ளிரவில் விசாரணை… வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை கொடுத்த ‘ஷாக்’..!!

Author: Babu Lakshmanan
18 July 2023, 8:40 am

நள்ளிரவில் விசாரணைக்கு பிறகு வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இதனை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு இந்தியன் வங்கி அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள் வருகை புரிந்தனர். இதனை தொடர்ந்து,13 மணிநேர சோதனைக்கு பின், தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது சொந்த காரிலேயே விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அமைச்சர் பொன்முடியையும், அவரது மகனையும் விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதிகாலை 3 மணிவரை நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.

இதைத் தொடர்ந்து, மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மகனும், திமுக எம்பியுமான கவுதம சிகாமணிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்