ED, சிபிஐ, வருமான வரித்துறை எல்லாம் பாஜகவின் தொண்டர் படை.. தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் : அமைச்சர் உதயநிதி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2023, 9:59 am
Udhaya- Updatenews360
Quick Share

உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை வழக்கில் முறையாக தமிழகத்தின் வாதங்களை எடுத்து வைத்து ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கி தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆகியோரால் நடத்தப்பட்ட இந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு, ரகுபதி, மெய்ய நாதன், மூர்த்தி, பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு காளை உருவம் பொறித்த செங்கோல் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் நடத்திய சட்ட போராட்டத்தினால் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிககட்டுக்கு தடை நீக்ப்பட்டது.

அரசியல் ஜல்லிகட்டை தற்போது பாசிச சக்திகள் தொடங்கியுள்ளனர்
முன்வாசல் வழியாக வராமல் புறவாசல் வழியாக பாஜக நுழைய பார்க்கிறது. அதிமுக ஜல்லிக்கட்டுக்கு எதுவும செய்யவில்லை

தமிழத்தை பின்னோக்கி ஆளுனர் எடுத்து சென்று வருகிறார். குழந்தை திருமணத்தை ஆதரிப்பது தமிழக கலாச்சாரத்தை அழிப்பது போன்ற நடவடிக்கைகளை ஆளுனர் செய்து வருகிறார்.

தமிழக முதல்வர் எதை கூறுகிறாரோ அதற்கு ஆளுநர் கோப்புகளில் கையெழுத்திட வேண்டும். மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்ப்தான் ஆளுநர்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 21 சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. அதில் முக்கியமான சட்டமான அதிமுக 26 அமைச்சர்கள் மீது ஊழல் செய்தது தொடர்பாக வழக்கு தொடர அனுமதிக்கும் சட்டமும் ஒன்றாகும்.

பாஜக அதிமுக ஆளுநர் ஆகியோர் கூட்டு சேர்ந்து சட்டங்களை நிறைவேற்ற விடாமல் செய்கின்றனர். மத்திய அரசின் அடக்குமுறை கண்டு முதல்வர் அஞ்சமாட்டார்.

மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகள் 25 சதவீதம் முடிவடைந்து விட்டது. அடுத்த ஜல்லிக்கட்டு மதுரையில் புதிதாக கட்டப்பட்ட மைதானத்தில் தான் நடைபெறும்

அதேபோன்று தொகுதிக்கு ஒரு ஜல்லிகலகட்டு திடல் அமைக்கப்படும்
அதிக ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டமான புதுக்கோட்டையிலும் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்படும்.

எத்தனை மோடி அமித்ஷா வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் நடக்காது
மிஸாவையே பார்த்தவர்கள் நாங்கள். பாஜகவின் தொண்டர் படையாக வருமானவரி துறை, அமலாக்கத்துறை, சிபிஐ மாறிவிட்டது அதுவும் தேர்தல் நேரத்தில் தான் இந்த தொண்டர்படை செயல்படும

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் அடைத்து வைத்து சித்திரவதை செய்து சோதனை நடத்தியுள்ளனர் எத்தனை சோதனைகள் வந்தாலும் அமைச்சர்கள் மட்டுமல்ல ஒரு திமுக தொண்டரை கூட அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆளுனரை வைத்து நம்மை அடக்கபார்க்கின்றனர் பாஜக. விஜயபாஸ்கர் வேலுமணி உள்ளிட்டோர் மீது வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அதிமுக ஆட்சிக் காலத்திலேயே சோதனை நடத்தியது ஆனால் தற்போது இந்த சோதனை தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன?

சர்வீஸ் சாலையில் நின்று ஓரமாக வேடிக்கை பார்த்த ஜெயக்குமார் தற்போது பேசி வருகின்றனர். புதிய பாராளுமன்றம் திறப்பதற்கும் செங்கோல் வைப்பதற்கும் ஜனாதிபதியை பாஜக அழைக்கவில்லை ஆனால் சென்னையில் உலக தரம் வாய்ந்த மருத்துவமனை திறப்பதற்கு நாம் ஜனாதிபதியை அழைத்தோம்.

இதுதான் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் உள்ள வேறுபாடு
செங்கோல் வைத்தால் மட்டுமே தமிழக மக்களிடம் இடம் பிடிக்க முடியாது

ஆமாம் அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த போராட்டத்தையும் அவர்கள் வெற்றி பெற செய்யவில்லை குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் தீய சக்திகள் புகுந்து விட்டதாக கூறி இந்த போராட்டத்தை கலைத்தனர்.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் அடிமைகளை விரட்டி அடித்து எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டன.

மருத்துவமனை, பொது நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளது ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெறும் வளைவுகள் மட்டுமே வைக்கப்பட்டது வேறு ஒன்றும் நடைபெறவில்லை எந்த நலத்திட்டங்களும் செய்யவில்லை.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 320

    0

    0