முதல்ல அமைச்சர் துரைமுருகனின் மகன்.. இப்ப அமைச்சர் பொன்முடி ; சுத்துப்போடும் அமலாக்கத்துறை ; அதிர்ச்சியில் திமுக!!

Author: Babu Lakshmanan
24 November 2023, 11:52 am

குவாரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், போலி பில்களை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழகத்தில் உள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மணல் குவாரி விவகாரத்தில் திமுக எம்பி கதிர் ஆனந்த்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் 30ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2006-11 திமுக ஆட்சியின் போது, கனிம வளத்துறை அமைச்சராக இருந்த போது, சட்டவிரோதமாக அவரது மகன் கௌதம சிகாமணிக்கு செம்மண் குவாரிகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

அண்மையில், இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திமுக அமைச்சர், எம்எல்ஏக்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அமலாக்கத்துறை முயற்சிப்பது ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

  • Upendra UI Movie First Card தியேட்டரை விட்டு வெளியே போங்க.. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஷாக்..!!
  • Views: - 247

    0

    0