அதிகாரிகளுக்கு கிடைத்த துப்பு… சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் வீட்டில் ED மீண்டும் ரெய்டு… கரூரில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
8 February 2024, 10:24 am

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, இந்த வீட்டிற்கு பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டிருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?