சென்னையைத் தொடர்ந்து திருச்சி… நகைக்கடைகளில் விடிய விடிய ரெய்டு ; அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி!

Author: Babu Lakshmanan
21 November 2023, 10:43 am

சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில், திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று நள்ளிரவு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கடைகளில் தொடர்ந்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள ஜாபார்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி, சூர்யா, விக்னேஷ் உள்ளிட்ட மூன்று கடைகள், பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

6 கார்களில் வந்த அமலாக்கதுறை அதிகாரிகள் 2 பேர் கடையில் உள்ளே நகைகள் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வரும் நிலையில். வெளியில் துப்பாக்கி ஏந்திய 10 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இந்த நான்கு கடைகளில் நடத்தப்படும் சோதனைக்கும், சென்னையில் நகை கடைகளில் நடத்தப்பட்ட சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

  • Kayadu Lohar Act with Senior Actor 57 வயது நடிகருக்கு ஜோடி… டிராகன் பட புகழ் கயாடு லோஹரின் கேரியரே போச்சு!