செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து சிக்கல்… நெருங்கிய வட்டாரங்களில் சிக்கிய கட்டு கட்டாக பணம் ; இறுகும் அமலாக்கத்துறையின் பிடி!!

Author: Babu Lakshmanan
5 August 2023, 4:41 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்” அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 3ம் தேதி காலை 8 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

மாலை 6 மணி வரை தொடர்ந்து, 10 மணி நேரத்திற்கு பிறகு சோதனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து சில ஆவணங்களை இரண்டு பைகளில் அதிகாரிகள் எடுத்துச் சென்று சோதனை நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து, சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான “தனலட்சுமி செராமிக்ஸ்” என்ற டைல்ஸ் கடை மற்றும் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை 2 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் இடையே டைல்ஸ் ஷோரூமுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் அதிகாரிகள் சில ஆவணங்களை நகல் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, நாமக்கல் பரமத்திவேலூரில் காளியப்பன்ன என்பவரின் வீடு மற்றும் நிதி நிறுவன அலுவலகத்திலும் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளார்.
கணக்கில் வராத ரூ.16.6 லட்சம் மதிப்பிலான பொருட்களும், 60 நிலங்கள் தொடர்பாக சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஏற்கனவே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அவர் தொடர்புடைய இடங்களில் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!
  • Close menu