ஓபிஎஸின் சவாலை ஏற்ற இபிஎஸ்… தயாராகும் முன்னாள் அமைச்சர்கள்… மாற்று வழியைத் தேடும் ஓபிஎஸ் தரப்பு…!!

Author: Babu Lakshmanan
28 June 2022, 12:55 pm

சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிரெதிராக செயல்பட்டது. பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று இபிஎஸ் தரப்பில் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

EPS-ops-updatenews360

இதனிடையே, தேர்தல் ஆணையத்திடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானாது என்றும், இபிஎஸ் தரப்பு வரும் 11ம் தேதி நடத்த உள்ள பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

OPS - Updatenews360

இதனால், கொதித்துப் போன எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாகவும், ஜுலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் முழு அடையாளம், அவரால்தான் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, ஜுலை மாதம் நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர். அதேவேளையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டே அனைத்தும் நடந்து வருவதாகக் கூறி வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வம் வீசும் அம்புகளை சமாளிப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

EPS Happy - Updatenews360

இந்த நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பதில் மனு அனுப்புவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு தயார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கான அதிகாரங்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதற்கான சட்ட விதிகளை குறிப்பிட்டு இந்தப் பதில் மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஜுலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக்கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டுவர தற்காலிக தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்துள்ள ஓபிஎஸ் தரப்பினர், கட்சி பதவியில் மாறுதல் செய்ய தடை கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் ஆணையத்தை நாடவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.

ஜுலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறுவதற்குள், என்ன வேண்டுமானாலும் கட்சியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 790

    0

    0