எதிரிகளுக்கு மரணஅடி கொடுக்க வேண்டும்… திமுக ராசிதான் இண்டியா கூட்டணி வலிமை இழக்கக் காரணம்… இபிஎஸ் பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
8 February 2024, 4:41 pm

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்களுக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக ஐடி விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்று நிரூபித்தவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. எதிரிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தும் விதமாக ஐடி விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அதிமுக ஆட்சியின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக கொண்டு சேர்ப்பது உங்களின் கடமை.

சமூகவலைதளங்களில் நமக்கு எதிராக மாற்றுக்கட்சியினர் செய்யும் செயல்களை முறியடிக்க வேண்டும். அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்களுக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக ஐடி விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அதிமுக மக்களுக்கான இயக்கம்.

இன்றைய ஆட்சியாளர்கள் பணத்தை நம்பியே உள்ளனர். நாம் மக்களை நம்பி உள்ளோம். அதிமுக தான் ஜனநாயகக் கட்சி. திமுக வாரிசு கட்சி. தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தோம். திமுகவின் ராசியால் தான் இண்டியா கூட்டணி தொடர்ந்து வலிமை இழந்து வருகிறது. வசனங்களை பேசி மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின், எனக் கூறினார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?