ஒரே கல்லு ரெண்டு மாங்கா… அண்ணாமலை, எல்.முருகன் செக் வைத்த இபிஎஸ் ; அதிமுக தலைமையிடம் இருந்து வந்த பரபர உத்தரவு..!!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 1:34 pm

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக, 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் அறிக்கையையும் வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் பிரச்சாரத்தையும் தொடங்க இருக்கிறார்.

திருச்சியில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் 40 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றனர்.

40 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை வடக்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், சென்னை தெற்கு தேர்தல் பொறுப்பாளராக கோகுல இந்திரா, காஞ்சிபுரம் பொறுப்பாளராக பா.வளர்மதி, அரக்கோணம் பொறுப்பாளராக கே.சி.வீரமணி, வேலூர் பொறுப்பாளராக தம்பிதுரை, கிருஷ்ணகிரிக்கு கேபி முனுசாமி, தருமபுரிக்கு கே.பி.அன்பழகன், திருவண்ணாமலை மற்றும் ஆரணிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோரும், விழுப்புரம் தொகுதிக்கு சி.வி சண்முகமும், நாமக்கல் தொகுதிக்கு தங்கமணியும், ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதிக்கு செங்கோட்டையனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், திண்டுக்கல் தொகுதிக்கு திண்டுக்கல் சீனிவாசன், தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளுக்கு ஆர்பி உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலை போட்டியிடும் கோவைக்கும், எல்.முருகன் போட்டியிடும் நீலகிரிக்கும், கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு உள்ள எஸ்பி வேலுமணி, சிம்மசொப்பனமாக திகழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!