இனி இது சரிபட்டு வராது… தடபுடலாக தேதியை குறித்த இபிஎஸ்… ஆயத்தமாகும் அதிமுக தொண்டர்கள்…!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 8:22 pm

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார தேதியை அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், தேமுதிக, பாமகவுடனான அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது. பாமக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்து விட்ட நிலையில், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை கொடுத்து கூட்டணியை உறுதி செய்ய அதிமுக முடிவு செய்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

eps

கூட்டணி உறுதியாகாவிட்டாலும், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், பிரச்சாரத்தில் ஈடுபட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அதன்படி, திருச்சியில் வரும் 24ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் அவர், முதல்கட்டமாக 30ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக தேர்தல் பிரச்சார அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 212

    0

    0