85 சதவீதமா..? ஸ்டாலின் சொன்னது பச்சை பொய்… அமைச்சர்களுக்கு ஜுரம் வந்துடுச்சு : எடப்பாடி பழனிசாமி பேச்சு..!!

Author: Babu Lakshmanan
9 February 2023, 8:52 pm

ஈரோடு : நீட் தேர்வு ரத்து செய்வதன் ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் இப்ப சொல்ல முடியுமா..? என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். இந்த நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளிடையே வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அவர் பேசியதாவது :- இன்று நாடே எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நோக்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். 2014ம் ஆண்டு ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியபடி, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்றோம்.

அதே போல் வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வெற்றி பெறும் பொது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அதிமுக தொண்டர்கள் தேனி போல் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலை சின்னத்திற்கு கிடைக்க வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்று 21 மாதங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. எங்கே பார்த்தாலும் ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து மது விற்பனை நிகழ்ந்து வருகிறது. தமிழகம் பொருளாதார முன்னேற வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக அத்திக்கடவு அவிநாசி திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி ஜவுளி தொழில் நிறைந்ததாக இருப்பதால் இலவச வேட்டி சேலை உற்பத்தி ஆணையம் ஆண்டு தோறும் வழங்கப்பட்டது. இதனால், விசைத்தறி உற்பத்தியாளர்கள் தொழில் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர்ந்தது.

ஆனால், திமுக ஆட்சியில் பொறுப்பு ஏற்றவுடனே இலவச வேட்டி, சேலை ஆணையை வழங்கவில்லை. இதனால், விசைத்தறி கூடங்கள் வேலையிழந்து விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு, விசைத்தறி தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டார்கள். இதனால், விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது.

இதனால், விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருவதாக வாக்காளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கலெக்ஷன், கரப்பசன், கமிஷனில்தான் சூப்பர் முதல்வர் என ஸ்டாலின் பெயர் பெற்றுள்ளார். அதிக நிதி யார் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் சிறந்த அமைச்சர். அரசு அதிகாரிகள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் இதனால், ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதை அரசு அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

தேர்தல் பரப்புரை செய்யும் அமைச்சர்கள் அங்கே கெடாய் விருந்து போட்டு வருகின்றார்கள். திமுக அமைச்சர்களுக்கு ஜோரம் வந்து விட்டது. திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், அது உங்கள் பணம் தான். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தினை சீர்குலைத்து வருகிறார்.

அதிமுக பெற்று எடுத்த குழந்தைக்கு திமுக பெயர் மட்டுமே சூட்டி வரும் நிலை உள்ளது.
பேனா நினைவு சின்னம் வைப்பதை எல்லா மக்களும் எதிர்க்கும் நிலையில், திமுக கலைஞர் மணிமண்டபம் முன்பு வைக்க வேண்டும். கடலில் தான் வைக்க வேண்டுமா..? மக்கள் வரிப்பணம் போவதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 484 கோடி ரூபாய் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 21 மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை. ஆகையால் நல்ல தண்ணீர் ஈரோடு மக்களுக்கு கிடைக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், எனது தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

திமுக பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கவில்லை. திமுகவினர் கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாநகர மத்தியில் உயர்மட்ட பாலம், அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பாலிட் மருத்துவமனை, புறவழிச்சாலை உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த திட்டம். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஸ்டாலின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும், நடைபயிற்சி மேற்கொண்ட போது, அப்போது மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தைப் பற்றி பேசி வரும் நிலையில், மக்களுக்கு எப்படி நன்மைகள் கிடைக்கும்.

குடும்ப ஆட்சி முடிவு கட்டுகிற வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைய வேண்டும். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவி அடி மாட்டு விலைக்கு படத்தை வாங்கி படம் வெளியீட்டு வேலையை செய்து வருகிறார்கள். இதனால், திரையுலகம் முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு பார்த்தாலே மக்களுக்கு சாக் அடிக்கும் நிலையில் உள்ளது. இதனால், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு மேலும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் குடியிருப்பு வாடகை கட்டணமும் உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் கடுமையாக பாதிப்பு சந்தித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் நியாயவிலைக் கடை மூலம் 10 மாதம் இலவசமாக பொருட்கள் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 4 லட்சம் கடன் இருந்த நிலையில், ஒரு வருடத்தில் 1 லட்சத்து 62ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய ஒரே ஆட்சி திமுக தான்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டம், 520 அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், 85 சதவீதம் திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னது பச்சை பொய்.

குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என்கிற திமுக வாக்குறுதியை திமுக அமைச்சர்கள் வந்தால் கேட்டு வாங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் ஓரே கட்சி அதிமுக. தாலிக்கு தங்கம், மானிய நிலையில் ஸ்கூட்டர், இலவச மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் திமுக நிறுத்தி விட்டது.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் நீட் ரத்து வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை. ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரகசிய தங்களிடம் இருப்பதாக சொன்னார்கள். இதுவரை அந்த ரகசியத்தை சொல்லவில்லை. இப்போதாவது சொல்லுங்கள் உதயநிதி ஸ்டாலின்.

3145 இடத்தில் 9 பேர் மட்டுமே நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பு கிடைத்த நிலையில், அதிமுக ஆட்சியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மூலம் 615 மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க முடிந்தது.

இதனால், அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு தான் முதல்வராக இருந்தபோது, தொகுதிக்காக பல்வேறு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதனால், மீண்டும் அவருக்கு வெற்றி பெற்று வாய்ப்பு கொடுங்கள். இனியும் திமுக மக்களை ஏமாற்றக் கூடாது என்கிற பாடத்தை வாக்காளர்கள் இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும், என கேட்டு கொண்டார்.

  • Samantha About Naga Chaitanya வீணாப் போன வேலையை செஞ்சிட்டேன் : நாக சைதன்யா பற்றி சமந்தா பதில்!
  • Views: - 481

    0

    0