ஓபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றத்திலும் செக் வைத்த இபிஎஸ் ; மேல்முறையீடு விவகாரத்தில் இருதரப்பும் காட்டும் தீவிரம்!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 5:32 pm

சென்னை ; அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்ட பிறகு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், இன்று காலை இந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டனர். அதில், அதிமுக பொதுக்குழு செல்லாது என தனிநீதிபதி அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து நாளையதினம் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணியினர் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் முறையீடு செய்யும் பட்சத்தில், தனது தரப்பின் கருத்தைக் கேட்ட பின்பே தீர்ப்பளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பாக தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாகவும், எப்போது விசாரணை நடத்துவது என்பது தொடர்பாகவும் நாளைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு அறிவிப்பர்கள் என கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 438

    0

    0