அதிமுக பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 15,16,17,24,25ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 5 கட்சிக்கு சென்ற நிலையில் வரும் தேர்தலில் எந்த கட்சியில் இருப்பார் என்று தெரியவில்லை.
மக்கள் தான் வாக்களிக்க உள்ளனர். பெரும்பான்மை வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதற்கு அவர் ஜோசியம் சொல்ல முடியாது. கடந்த 21 மாதங்களில் எந்த திட்டமும் ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்யவில்லை. இதனால், எந்த முகத்தை வைத்து மக்களிடம் வாக்கு சேகரிக்கின்றனர். பணத்தை வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திமுக தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், தேர்தல் அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை. 1999ம் ஆண்டு திமுக – பாஜக கூட்டணி இருந்த போது, திமுக என்ன அடிமை சாசனம் எழுதி கொடுத்தது. அதிமுக பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை.
மக்கள் விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, போதை பொருள் நடமாட்டம்,போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணபலன், 8 வழிச்சாலை திட்டம் இதற்கெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் பிளாஸ்டிக் ஒட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளனர்.
மக்கள் துன்பப்பட்டும் திட்டங்களுக்கு குரல் கொடுக்காத கட்சியெல்லாம் அடிமை சாசனம் எழுதி கொடுத்திருப்பது போன்று தானே. டெல்டா பகுதியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் குரல் கொடுக்கவில்லை.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் திமுக வாக்குறுதி கொடுத்த நிலையில், 38 நாடளுமன்ற உறுப்பினர்களைத் வைத்து கொண்டு தமிழ்நாட்டின் நலனுக்காக இதுவரை என்ன செய்தனர், ஆனால், அதிமுக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது, காவிரி மேலாண்மை பிரச்சினைக்காக 12 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம்.
25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைத்த நிலையில், திமுக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. திமுக 85 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளோம் என்று சொல்வது பச்சை பொய். திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்குள் திமுக ஆட்சி முடிந்து விடும், என்று தெரிவித்தார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.