இதுவரை 93 பேர்… வெடிவிபத்தை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத CM ஸ்டாலின் ; இபிஎஸ் குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan1 May 2024, 7:28 pm
வெடிபொருள் விபத்துகளை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பொம்மை முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஆவியூரில் கல் குவாரி குடோன் வெடித்து சிதறி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாமல் வெடி பொருட்களை நகர்த்தியதே விபத்திற்கு காரணம் என செய்திகள் வருகின்றன.
மேலும் படிக்க: கருணாநிதியை மேடையிலேயே எதிர்த்தவர் நடிகர் அஜித்… எனக்கும், அஜித்துக்கும் ஒரே வேவ் லென்த் ; ஜெயக்குமார் சொன்ன REASON..!!
கடந்த சில வருடங்களில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 93 பேர் உயிரிழந்ததாக சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியான விபத்துகள் நடந்தும் இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற தொடர் விபத்துகளும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்புகளும்.
வெடிபொருள் விபத்துகளை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பொம்மை முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், இவ்விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.