சென்னை ; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும்; ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம் என்ற மமதையில் திமுக-வினரின் அராஜகங்கள், அட்டூழியங்கள், வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதையும், நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022-ல் நடைபெற்ற தேர்தலில் கழக வேட்பாளரின் வெற்றிக்கு, நகர 2-ஆவது வார்டு கழக துணைச் செயலாளர் ஹேமநாதன் மற்றும் அவருடைய சகோதரர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் அரும்பாடுபட்டுள்ளனர். இத்தேர்தலில் தோல்வியடைந்த திமுக-வினர், திரு. கார்த்திகேயன் மீது கடந்த ஆண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில், அவர் 3 மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பியதாகத் தெரிய வருகிறது.
இந்நிலையில், மறைமலைநகர் நகரில் கடந்த 18.9.2023 அன்று உள்ளூர் கோயில் திருவிழா ஊர்வலத்தின்போது, தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த திரு. கார்த்திகேயன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் திமுக-வினர் பாட்டாசுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட நிலையில், திரு. கார்த்திகேயன் அவர்களை திமுக-வினர் சரமாரியாகத் தாக்கியதால், பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அன்புச் சகோதரர் திரு. கார்த்திகேயன் அவர்களை இழந்து வாடும் அவரது சகோதரரும், மறைமலைநகர் நகர 2-ஆவது வார்டு கழக துணைச் செயலாளருமான திரு. ஹேமநாதன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி
நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கழக உடன்பிறப்பு திரு. கார்த்திகேயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் காவல் துறை உடனடியாகக் கைதுசெய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்தள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.