இரட்டை இலைக்காக புது ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்… பொதுக்குழுவை கூட்டாமலே காய் நகர்த்த திட்டம்… ஐடியா கைகொடுக்குமா..?
Author: Babu Lakshmanan3 February 2023, 9:45 pm
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், குறைந்த கால அவசாசமே உள்ளதால் பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார். அதில், முன்னாள் மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.