போட்டி அரசியலுக்கு என்ட் கார்டு…? டைம் பார்த்து ஓபிஎஸ்-க்கு செக் வைத்த இபிஎஸ்… அதிர்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!!
Author: Babu Lakshmanan22 December 2022, 2:28 pm
சென்னை : அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்திய ஓபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை தலைமை தீவிரமடைந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஒருமுறை ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் மறுமுறை எடப்பாடி பழனிசாமி ஆதரவாகவும் தீர்ப்பு வந்தது.
இதனையடுத்து, பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அந்த வழக்கானது விரைவில் விசாரணைக்குவரவுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் அணியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து பேசிவருகிறார்.
அதேவேளையில், ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்று நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய ஓபிஎஸ், தன்னை வெளியே அனுப்ப திட்டம் தீட்டப்பட்டதாகவும், இன்னமும் அதிமுகவுக்கு நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி தனிக்கட்சி தொடங்க தைரியம் இருக்கா..? என்று எல்லாம் கேள்விகளை எழுப்பினார்.
இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் பொறுப்பு இபிஎஸ் வசம் இருப்பதால் ஓபிஎஸ் இது போன்று செயல்படுவது குறித்து சட்டவிளக்கம் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸிற்கு உடனடியாக ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்காவிட்டால், சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த வக்கீல் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிமுக-வாக அங்கீகரித்து விட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு இது பெரும் சிக்கலாக எழுந்துள்ளது. மேலும், ஜனவரி 4ம் தேதி வெளியாக இருக்கும் பொதுக்குழு குறித்த தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையிலேயே ஓ.பன்னீர்செல்வம் இதுபோன்று பேசியதாகவும், ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளினால், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கே தீர்ப்பு சாதகமாக வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.