கரும்பு சாகுபடி விவசாயிகளை காப்பாற்றுங்க…போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
9 September 2023, 12:46 pm

கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகளை உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மஞ்சள் அழுகல் நோய் போன்றவற்றால் நஷ்டமடைந்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளை அதிகாரிகள் நேரில் சந்தித்து, கரும்பு பாதிப்பு குறித்து கணக்கெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கரும்புகளை காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகளை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?