அமைச்சர்கள் சொல்வதெல்லாம் பொய்… எந்த உதவியும் மக்களுக்கு கிடைக்கல ; இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
5 December 2023, 7:46 pm

ஒரு மழைக்கே தாங்க முடியாத நிலையில் சென்னை இருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். கே.பி.கே. நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அதிமுக தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அதிமுக ஆட்சிக் காலத்தில் பருவமழை தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படாததே மக்களின் இன்னல்களுக்கு காரணம். வானிலை ஆய்வு மையம் அறிவித்த பிறகு கூட தற்போதைய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளாததால் சென்னை மற்றும் புறநகரில் நீர் தேக்கம்.

மழை வந்த பின் நிவாரணப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மக்கள் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர் ; ஒரு மழைக்கே தாங்க முடியாத நிலையில் சென்னை உள்ளது. ரூ.4,000 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைத்திருப்பதாக முதலமைச்சர், அமைச்சர்கள் கூறி வந்தனர். எல்லாம் செய்து விட்டதாக அமைச்சர்கள் கூறும் நிலையில், மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எப்போது மோட்டார் வாங்கி எப்போது தண்ணீரை வெளியேற்றப் போகிறார்கள்..?, எனக் கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!