வேட்டியை மடித்து கட்டி சேற்றில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி.. அழுகிய பயிர்களுடன் முறையிட்ட விவசாயிகள்…!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 2:34 pm

கடலூர் ; கடலூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கையை கேட்டறிந்தார்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கடலூருக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தார். சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் அவர் வெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

பின்னர், பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான் முதல்வராக இருக்கும் வரை ஏழை மக்களுக்காக பணி செய்தோம். பருவமழை காலங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கனமழைக்கு பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வெள்ளபாதிப்புகளை தடுத்தது அ.தி.மு.க. அரசு.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆதனூர், குமாரமங்கலம் இடையே ரூ.500 கோடி செலவில் கதவணை அமைத்து வெள்ள பாதிப்பை தடுத்தது அ.தி.மு.க. அரசு. ஒரே ஆண்டில் 2 முறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்கடனை முறையாக தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. அரசு.

எம்.ஜி.ஆர். காலம் தொட்டு ஏழை மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருவது அ.தி.மு.க. அரசு. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை காழ்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசு கைவிட்டது. குறிப்பாக அம்மா கிளினிக் மூடப்பட்டது. அம்மா இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது.

அதேபோல் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் அப்படித்தான். இன்றைக்கு ஒரு பவுன் 38 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் திருமண வயதை எட்டும்போது, பொருளாதார நிலையின் காரணமாக திருமணம் தடைபடுகிறது. அதுபோல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குப் பார்வையுடன் ரூ. 25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் உதவித்தொகை மற்றும் தாலிக்கு ஒருபவுன் தங்கம் என்ற திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்துகொண்டிருக்கிறது. ஏழைகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ. அப்போதெல்லாம் அ.தி.மு.க. உங்களுக்கு துணை நிற்கும், சேவை செய்யும்,” என்று கூறினார்.

அதேபோல, சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளையும், 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட நல்லூர், அகர வட்டாரம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரில் மூழ்கியுள்ள விளைநிலங்களை பார்வையிட்டார்.

https://twitter.com/i/status/1592775760905109505

அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வயலில் நேற்றில் இறங்கி,

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 425

    0

    0